பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

சாத்தூர், பிப்.14: பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி, சாத்தூரில் மாதர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாத்தூர் வடக்கு ரத  வீதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாதர் சங்க மாவட்ட செயலாளர் உமா தலைமை வகித்தார். மாதர் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் லெட்சுமி முன்னிலை வகித்தார். மாதர் சங்க நகர செயலாளர் தெய்வானை ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில், ‘கடந்த நவ.13ம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், சுமார் 8 லட்சம் பேர் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில், உரிய முறையில் வாதிட்டு, பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினர். இதில், 100க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள், மாதர்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

× RELATED வறட்சியால் காய்ந்த தென்னை அரசு...