காரியாபட்டியில் காலனி மக்கள் தர்ணா

திருச்சுழி, பிப். 14: காரியாபட்டி அருகே, கே.செவல்பட்டி காலனியைச் சேர்ந்த பொதுமக்கள், தமிழக அரசின் ரூ.2000 பெறுவதற்காக, தங்களை வறுமை கோட்டிற்கு கீழ் சேர்க்க வேண்டும் என  காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மோகன்கென்னடியிடம் நேற்று மனு கொடுக்க சென்றனர். இதற்கு அவர் நான் மனு வாங்க அரசு உத்தரவிடவில்லை என மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காரியாபட்டி சப் இன்ஸ்பெக்டர்கள் ஜோதிமுத்து, வினோத்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மனுக்கள் பெறப்பட்டன. இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

× RELATED சென்னை அயனாவரம் ரயில்வே காலனியில் தொட்டிலில் விளையாடிய சிறுமி பலி