தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

ராஜபாளையம், பிப். 14: ராஜபாளையத்தில் தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் தெற்குமலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. மனைவி சரஸ்வதி, மகன் முருகானந்தம் (40), டெய்லர். திருமணமாகவில்லை. கடந்த மாதம் சரஸ்வதி உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால், மனமுடைந்த முருகானந்தம் கடந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறினார். மாயமான அவரை கண்டுபிடித்து தரும்படி ராஜபாளையம் தெற்கு போலீசில் முத்துச்சாமி புகார் அளித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சுந்தரராஜபுரம் வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில், தூக்கில் தொங்கிய நிலையில் முருகானந்தம் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED தாயை கொன்று மகன் தற்கொலை