ரூ.2 ஆயிரம் வழங்கிட தமிழகஅரசு உத்தரவு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர் பட்டியல் சர்வே வங்கி கணக்கு வாங்கும் பணி தொடங்கியது

உத்தமபாளையம், பிப்.14: வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு ரூ.2ஆயிரம் வழங்கப்படும் என தமிழகஅரசு உத்தரவிட்டதை அடுத்து உத்தமபாளையம் தாலுகாவில் இதற்கான பட்டியலை சர்வே செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
உத்தமபாளையம் தாலுகாவில் உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் மற்றும் ஊராட்சிகளான ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், டி.சிந்தலைசேரி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளிலும் ஏற்கனவே வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டது.
இந்த பட்டியலை எடுத்து கொண்டு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் தற்போது குடியிருக்கிறார்களா, குடும்ப நபர்கள், ஆதார் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் திரட்டப்படுகின்றன. மேலும் வெளியூர்களுக்கு சென்றவர்கள், இறந்தவர்கள் உள்ளிட்ட விபரங்களும் பெறப்படுகிறது. இதனை வாங்கி சரியான முறையில் தகவல்களை பெற்ற பின்பு மொத்த பட்டியலும் அரசு உயர்அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

× RELATED தமிழகத்தில் நடமாட விடமாட்டோம் கமலுக்கு மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை