×

மாதிரி வாக்குப்பதிவு 538 வாக்குப்பதிவு மையங்களில் 26 ஆயிரம் பேர் வாக்களித்தனர்

தேனி, பிப். 14: தேனி மாவட்டத்தில் 538 வாக்குச்சாவடி மையங்களில் நடமாடும் வாக்குப்பதிவு உறுதிசெய்யும் இயந்திரம் மூலம் 26 ஆயிரம் பேர் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு உறுதி செய்யும் முறையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு செய்யும் முறை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திர முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 1128 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 538 வாக்குச்சாவடி மையங்களுக்கு நடமாடும் வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரத்துடன் தேர்தல் பணியாளர்கள் சென்று வாக்காளர்களிடம் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி, இதில் தாங்கள் வாக்களித்த வாக்கு தான் வாக்களித்த சின்னத்தில் பதிவாவதை உறுதிபடுத்தும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 6 நடமாடும் வாகனங்கள் என மொத்தம் 24 வாகனங்கள் மாவட்டம் முழுவதும் சென்று வாக்குப்பதிவை கடந்த 9ம் தேதி முதல் நடத்தி வருகிறது. இத்தகைய வாக்குப்பதிவு நாளை முடிவடைய உள்ளது. கடந்த 9ம் தேதி முதல் நடந்த வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாமில் 538 வாக்குச்சாவடி மையங்ஙகளிலுமாக மொத்தம் 26 ஆயிரம் பேர் மாதிரி வாக்களித்து, தாங்கள் வாக்களித்த வாக்கு பதிவானதை உறுதி செய்யும் இயந்திரம் மூலம் அறிந்து கொண்டுள்ளனர்.

Tags : voting centers ,
× RELATED வாக்கு என்னும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு