போடி அருகே பால் விலையை உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

போடி, பிப். 14: போடி அருகே பால் விலையை உயர்த்த வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் பசுமாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.போடி அருகே சில்லமரத்துப்பட்டி பொதுநூலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார்.
பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். மாட்டுத் தீவனங்களுக்கு 50 சதம் மானியம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில் அரசுகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள், பசுமாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

× RELATED கூடுதல் விலைக்கு ஆவின் பால் பாக்கெட்கள் விநியோகம்