திமுக சார்பில் போடி, வருசநாட்டில் ஊராட்சி சபைக்கூட்டம்

போடி, பிப். 14: போடி அருகே சிலமலை, மணியம்பட்டி, நாகலாபுரம் போன்ற கிராம பஞ்சாயத்துகளில் திமுக சார்பில் ஊராட்சி சபைக்கூட்டம் நடைபெற்றது.
போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணன் தலைமை வகித்தார். சிலமலை கிளை செயலாளர் ராமர் லட்சுமணன், மணியம்பட்டி கிளை செயலாளர் அய்யப்பன், நாகலாபுரம் கிளை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்
தனர்.
இக்கூட்டங்களில் மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம், முன்னாள் போடி ஒன்றிய குழுத்தலைவர் செல்வன், மாவட்ட துணைச்செயலாளர் மயில்சாமி அன்புசெழியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வருசநாடு
கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு, முருக்கோடை, செங்குளம் தும்மக்குண்டு ,சிங்கராஜபுரம் , கருப்பையாபுரம், போன்ற
கிராமப் பகுதிகளில் திமுக கட்சி சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் குரு இளங்கோ, மாநில பொதுக்குழு உறுப்பினர் சேரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தமிழரசன், மாவட்ட மருத்துவ அணி துணைச்செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்ேபாது கம்பம் ராமகிருஷ்ணன் பேசுகையில், `` மலைக்கிராம வெளியேற்ற வேண்டும் என வனத்துறை துடிக்கிறது. ஆனால், அதிமுக அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மலைக்கிராம மக்களின் நலனுக்காக திமுக எப்போதும் துணை நிற்கும். மலைக்கிராம மக்களுக்காக போராட எப்போதும் தயங்காது’’ என்று கூறினார்.

× RELATED மாலையணிவித்து மரியாதை பழநியில்...