×

அதிகாரிகள் வாங்காததால் மனுக்களை தரையில் வீசிச் சென்ற மக்கள் இரண்டரை ஆண்டாக இழுத்தடித்த தங்கம், உதவித்தொகை கிடைத்தது போடி மக்கள் மகிழ்ச்சி

போடி, பிப். 14: இரண்டரை ஆண்டுகளாக தாலிக்கு தங்கமும், திருமண உதவித் தொ கையும் கிடைக்காமல் இழுத்தடிக் கப்பட்டு வந்த நிலையில் தினகரன் செய்தி எதிரொலியால் அவை கிடைத்துள்ளது போடி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏழை, எளிய பெண்களுக்கு தாலிக்கு தங்கமும், 8ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரையில் படித்த இளம்பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகையும், 12ம் வகுப்பிற்கு மேல் பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் திருமண உதவித் தொகையாக உயர்த்தி வழங்கி வருகிறது.
இந்நிலையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, முதியோர் உதவித்தொகை, தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகை உள்பட நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் இரண்டரை ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது.
தாலிக்கு தங்கம் கேட்டு மனு செய்தவர்களுக்கும், திருமண உதவி தொகை கேட்டு மனு கொடுத்தவர்களுக்கும் ஆயிரத்திற்கும் மேலானோர் இனி கிடைக்காது என்ற நம்பிக்கையை இழந்தனர். பல தம்பதியினர்களுக்கு குழந்தைகளும் பிறந்து பெற்றோர்களாகி விட்டனர். அதன்படி தேனி, போடி, சின்னமனூர் ஒன்றியங்களில் மட்டும் 800க்கும் மேற்பட்டோர் போடி சட்டமன்ற தொகுதியில் திருமண உதவித்தொகை கேட்டு அலைந்து வந்தனர். வட்டிக்கு கடனாக வாங்கி திருமணத்தை நடத்திய பலர் உதவி தொகை கிடைக்காமல் வட்டி கட்ட சிரமப்பட்டனர்.
இதுகுறித்து தினகரனில் செய்தி பிப்.7ம் தேதி வெளியானது. இதன் எதிரொலியாக இரண்டு நாட்களுக்கு முன்பாக தேனியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்டம் முழுவதும் தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
தினகரன் செய்தி எதிரொலியால் இரண்டரை ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகையும் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளளனர். தினகரன் நாளிதழுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

Tags : ground ,
× RELATED ஆலு பாலக்