விளை நிலத்தில் மின்கோபுரங்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு

காங்கயம், பிப்.14: காங்கயம் பகுதியில் விவசாய நிலத்தில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் பிரச்னை தொடர்பாக நடைபெற்ற விவசாயிகள் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஆலோசனைக் கூட்டத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு காங்கயம் தாலூக்கா முழுவதும் உள்ள கிராமங்களில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர், மாவட்ட நிர்வாகம் என அனைத்து வழிகளிலும் பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும் என மனு அளித்தனர். மேலும் போலீசார் மூலம் விவசாயிகளை மிரட்டி நிலத்தில் மின்கோபுரத்தை நட்டு வருகின்றனர். ஆனால் இதற்காக அனுமதி ஏதும் இல்லாமல் அதிகாரிகள் இது போன்று செயல்களில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  காங்கயம் அருகே உள்ள ராமபட்டினம் மற்றும் நிழலிகவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Advertising
Advertising

நேற்று விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்கும் இடத்தை மதிமுக பொது செயலாளர் வைகோ பார்வையிட்டார்.

அதே போல 31 மின் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் விவசாயிகளின் போராட்டத்தால். 12 திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊதியூர் அருகே உள்ள நீலிக்கவுண்டம்பாளையத்தில் உயர்மின் கோபுரம் தொடர்பாக விவசாயிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர், முத்துவிஸ்வநாதன், தலைவர் ராஜாமணி, ஈரோடு முன்னால் எம்.பி கணேசமூர்த்தி, தற்சார்பு விவசாய சங்கதின் பொன்னையன், ஏர்முனை இளைஞர் அணி சுரேஷ், கட்சி சார்பற்ற விவசாய சங்கம், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் என 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வரும் நாட்களில் நடைபெறும் போராட்டத்தில் வைகோ விவசாயிகளுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துளார். நீதிமன்ற அனுமதியுடன் தொடர் உண்ணாவிரதம் இருக்கவும், விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: