×

மூதாட்டியை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை

காங்கயம்,பிப்.14: காங்கயம் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு  3 ஆண்டு சிறை தண்டனை விதித்து காங்கேயம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
 காங்கயம் அருகேயுள்ள காத்தாங்கண்ணி கிராமம் பள்ளநாயக்கன்பாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் மாரம்மாள் (60) கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி வீட்டின் அருகே உள்ள பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் அதே ஊரை சேர்ந்த துரை என்கிற செந்தில்குமார் (36) என்பவர் மூதாட்டி மாரம்மாளை தாக்கியதில் அவரது இடது கண் பாதிக்கப்பட்டு பார்வையை இழந்தார்.
 இது  தொடர்பாக காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு காங்கயம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.வழக்கை  விசாரித்த மாஜிஸ்திரேட்டு சுப்பிரமணியன் குற்றவாளி துரை  என்கிற செந்தில்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும்,5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா