×

பள்ளியில் விளையாட்டு விழா

காரைக்குடி, பிப். 14: காரைக்குடி அருகே, கோட்டையூர் முத்தையா அழகப்பா பள்ளி 45வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். பள்ளி தாளாளர் அண்ணாமலை, உமையாள் அண்ணாமலை ஆகியோர் தலைமை வகித்தனர். என்சிசி 9வது பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் கர்னல் அஜய்ஜோஷி துவக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சூரன், வனத்துறை அதிகாரி மணிவண்ணன், உடற்கல்வி இயக்குநர் விஸ்வலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். விழாவில் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்கள் 38 பேர் கலந்து கொண்டு தங்களின் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தினர். இரண்டு வீல் சேர்கள் வழங்கப்பட்டது. மாணவர் விமல் நன்றி கூறினார்.

Tags : Game Festival ,school ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி