கல்லூரியில் இளைஞர் தினவிழா

காரைக்குடி, பிப். 14: காரைக்குடி அருகே, அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் இளைஞர் தினவிழா கொண்டாப்பட்டது. கலாச்சார மன்ற ஒருங்கிணைப்பாளர் மீனலோச்சனி வரவேற்றார். கல்லூரி தாளாளர் மத்சுவாமி ஆத்மானந்த மகாராஜ் அருளாசி வழங்கினார். கல்லூரி முதல்வர் செல்வராணி தலைமை வகித்தார். மதுரை ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த மத் சுவாமி தத்பிரபானந்த மகாராஜ் விவேகானந்தரின் வாழ்வியல் கொள்கைகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கினார். சாரதா நிகேதன் டிராஸ்ட் நிர்வாகிகள் மாதாஜி சுந்தரிஅம்மா, சகோதரி ஷாலினி, தேவகோட்டை இமயம் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பரதநாட்டியம், பேச்சுப்போட்டி, நடிப்பு, சமையல், நாடகம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. கலாச்சார மன்ற ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரிரம்யா நன்றி கூறினார்.காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

× RELATED வாக்கு எண்ணிக்கையையொட்டி...