×

மானாமதுரையில் முதியோரைஅலைக்கழிக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி

மானாமதுரை, பிப்.14: மானாமதுரையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் முதியோர்களுக்கு உரிய தகவல்களை அளிக்காமல் அலைக்கழிப்பதாகவும், வங்கி கணக்கு புத்தகத்தை கூட வரவு வைத்து கொடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.மானாமதுரை நகரில் பத்துக்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. இவற்றில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் முதியோர்களுக்கு ஓய்வூதியம், அரசு உதவித்தொகை உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன.
பணமதிப்பு இழப்பு பிரச்னைக்குப்பின் ஏடிஎம் மையங்கள் பூட்டியநிலையில் இருப்பதால் முதியோர்கள் ஓய்வூதியத் தொகையை பெற வங்கிகளுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் வங்கிகளில் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். வங்கிகளில் முதியோருக்கு தனி இருக்கைகள் இல்லை. இதனால் தரையில் அமரவேண்டிய நிலை உள்ளது. பணம் பெறுவது, வங்கிக்கணக்கு புத்தகத்தை பணம் எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கும், புத்தகத்தை வரவு செலவு பரிவர்த்தனைகளை பதிவு தொடர்பாக எந்தவித உதவியும் செய்ய மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து சரவணக்குமார் கூறுகையில், `` வங்கியில் எங்களுக்கு என தனியாக வரிசை இல்லை. மேலும் அமருவதற்கு இருக்கை இல்லை. பணப்பரிவர்த்தனை தொடர்பாக கணக்கு புத்தகங்களில் வரவு வைத்து கொடுக்குமாறு கேட்டால் அலட்சியமாக பேசுகிறார்கள். எனவே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் முதியோர்களுக்கு உதவ உதவியாளர்களை நியமிக்க வங்கி நிர்வாகங்கள் முன்வரவேண்டும்’’ என்றார்.

Tags : Bank ,Manamadurai ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...