மாவட்டத்தில் சப்இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சிவகங்கை, பிப். 14: சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 5 எஸ்ஐக்களை வேறு இடங்களுக்கு பணியிடமாறுதல் செய்து எஸ்பி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்த எஸ்ஐ பூமிநாதன் மாவட்ட குற்ற பதிவேடுகள் (சிசிடிஎன்எஸ்) பிரிவிற்கு மாறுதல் செய்யப்பட்டார். சிவகங்கை தாலுகா போலீஸ் ஸ்டேசனில் எஸ்ஐயாக பணிபுரிந்த முத்துப்பாலு, நெகுப்பை போலீஸ் ஸ்டேசனில் எஸ்ஐ.யாக பணிபுரிந்த சக்திவேல், திருப்பத்தூர் போலீஸ் ஸ்டேசனில் எஸ்ஐயாக பணிபுரிந்த சண்முகம், காளையார்கோவில் போலீஸ் ஸ்டேசனில் எஸ்ஐயாக பணிபுரிந்த பாண்டியன் ஆகிய நால்வரும் சிவகங்கை மாவட்ட தனிப்பிரிவிற்கு மாறுதல்
செய்யப்பட்டனர்.

× RELATED மாவட்டம் மாலையில் படியுங்கள்...