முதுகுளத்தூர் ஒன்றிய திமுக பொறுப்பாளர் நியமனம்

சாயல்குடி, பிப்.14:  முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த கீழத்தூவல் முத்துராமலிங்கம் கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவரின் மறைவால் அந்த பொறுப்பு காலியாக இருந்தது. தற்போது முதுகுளத்தூர் ஒன்றிய திமுக பொறுப்பாளராக கீழக்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முகத்தை திமுக தலைமை நியமித்துள்ளது.
சண்முகம் இளைஞரணி அமைப்பாளர், ஊராட்சி செயலர், மாவட்ட பிரதிநிதி போன்ற பதவிகளை வகித்துள்ளார். இவருக்கு மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

× RELATED தொண்டியில் கட்டி முடிக்கும் முன்பே...