×

விபத்து, குற்றங்களை தெரிவிக்க தொலைபேசி எண்ணுடன் விளம்பர போர்டுகள்

சாயல்குடி, பிப்.14: சாலை விபத்து குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தெரிவிக்க தொலைபேசி எண் குறித்த விளம்பர போர்டுகளை போலீசார் அமைத்தனர்.
நெடுஞ்சாலைகளில் நடக்கும் போக்குவரத்து குற்றங்கள், மற்றும் சாலை விபத்துகள் குறித்து புகார் தெரிவிக்க 94981 81457 என்ற தொலைபேசி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. இந்த அலைபேசி எண் நேரடி கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு உடன் தெரிவிக்கப்பட்டு உடனடி தீர்வு காணப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் சாலை விபத்துகள் மற்றும் சாலை குற்றங்கள் தொடர்பாக தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண் குறித்த விளம்பர பலகைகளை எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா மாவட்டம் முழுவதிலும் உள்ள பொதுமக்கள் கூடும் இடங்கள், போக்குவரத்து நெரிசல் பகுதி, விபத்து பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் வைக்க உத்திரவிட்டார். இதன்படி கடலாடி, சாயல்குடி மற்றும் முதுகுளத்தூர் அந்தந்த காவல் எல்கை பகுதிகளில் போலீசார் விளம்பர பலகைகளை வைத்து வருகின்றனர்.
கடலாடியில் இன்ஸ்பெக்டர் இளவரசன் தலைமையிலும், எஸ்.ஐகள் நாகராஜபிரபு, சரவணக்குமார் முன்னிலையிலும், முதுகுளத்தூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் பென்ஷாம், எஸ்.ஐ அமுதாவள்ளி, சாயல்குடி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை போன்ற இடங்களில் எஸ்.ஐ காளிமுத்து முன்னிலையில் போலீசார் விளம்பர போர்டுகளை அமைத்தனர். வியாபாரிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களையும் வழங்கினர்.

Tags : Advertising boards ,
× RELATED சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட...