×

பசுமை படையை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்

ராமநாதபுரம், பிப்.14: ராமநாதபுரத்தில் மாவட்ட பசுமைப்படையின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு, ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை தாங்கினார். பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட வனச்சரகர் சதீஷ் கலந்து கொண்டு உரையாற்றினார். அனைத்துப் பள்ளிகளிலும் பசுமைத் தோட்டம் அமைக்க வேண்டும். ஒரு சில பூச்செடியை வைத்தால் மட்டும் தோட்டம் இல்லை. பள்ளியின் மாடிகளில் தோட்டம் அமைக்கலாம்.
பசுமை தோட்டத்தில் விளைவிக்கும் காய்கறிகளை சத்துணவு மையங்களில்  பயன்படுத்தலாம். மூலிகைச் செடிகளை வளர்த்தால் சுத்தமான மருத்துவ மணம் கொண்ட  காற்றை சுவாசிக்க முடியும். மாணவ,மாணவியரை பசுமையான இடங்களுக்கு அழைத்து சென்று மரம் செடிகள் பசுமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என பேசினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான பள்ளிகளில் உள்ள ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : training camp ,coordinators ,Green Force ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்