தமிழ் பேச்சு போட்டி அரசு பள்ளி மாணவி முதலிடம்

தொண்டி, பிப்.14:  மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கான பல்வேறு போட்டிகளில் தமிழ் பேச்சு போட்டியில், நம்புதாளை அரசு பள்ளி மாணவி வட்டார அளவில் முதலிடம் பிடித்தார்.
கல்வி மாவட்டம் அளவில் பள்ளிகளுக்கு இடையேயான ஓவியம், கதை, கட்டுரை, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் வட்டார அளவிலான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் திருவாடானை வட்டார அளவில் தமிழ் பேச்சு போட்டியில், நம்புதாளை அரசு உயர்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி வைரஜேதி முதலிடம் பிடித்துள்ளார். இவர் வரும் 15ம் தேதி மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற உள்ளார். இவரை பாராட்டி பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஆத்மநாதன் தலைமை வகித்தார். ஆசிரியை வளர்மதி, உடற்கல்வி ஆசிரியர் வின்சென்ட் சேவியர், ரமேஷ் உட்பட பொதுமக்கள் பாராட்டினர்.

× RELATED விளையாட்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்