தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுக்கூட்டம்

சேலம், பிப்.14: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 26வது மாநில மாநாடு சேலத்தில் நடந்தது. நேற்று 3வது நாளையொட்டி, செவ்வாய்பேட்டை நிலையம் அருகில் இருந்து விவசாய சங்கங்களின் பேரணி நடந்தது. பேரணி கலெக்டர் ஆபீஸ், திருவள்ளுவர் சிலை, குண்டுபோடும் ெதரு வழியாக கோட்டையில் நிறைவடைந்தது. பின்னர் கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநில துணைச்செயலாளர் சுப்பராயன், மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம், மாநில துணைச்செயலாளர் வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பாலாற்றில் தமிழக உரிமையை காக்க வேண்டும். தென்னை வளர்ப்பை பாதுகாக்க வேண்டும். வீட்டு வசதி சங்கத்தில் உள்ள அனைத்து நிலுவைக்கடன்களை ரத்து செய்ய வேண்டும். பேராசிரியர் சாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றவேண்டும். ஆலைக்கழிவுகளை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். நில உச்ச வரம்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். கால்நடை வளர்ப்பினை ஊக்கப்படுத்த வேண்டும். தமிழக நீர்நிலைகளை மராமத்து பணிகள் செய்ய வேண்டும். வேளாண் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். காட்டுப்பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: