பாலியல் வழக்கில் கைதான ஆத்தூர் தொழிலதிபர் மத்திய சிறையில் அடைப்பு

ஆத்தூர், பிப்.14: பிளஸ்2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஆத்தூர் தொழிலதிபரை, போலீசார் நேற்று சேலம் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர்  வடக்கு உடையார்பாளையத்தை சேர்ந்தவர் ெதாழிலதிபர் நடராஜன்(76). இவருக்கு  சொந்தமாக அதே பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதனை நடராஜன்  வாடகைக்கு விட்டுள்ளார். இதில் ஒரு வீட்டில், 17 வயது சிறுமி  தங்கியுள்ளார். அந்த சிறுமி தொழிலதிபர் வீட்டில் வீட்டு வேலை செய்தபோது பாலியல் ரீதியாக மாணவியை துன்புறுத்தி வந்துள்ளார்.கடந்த 2 மாதமாக அவரது  தொல்லை எல்லை மீறியுள்ளது. இதுதொடர்பாக, கடந்த திங்கட்கிழமை ஆத்தூர்  டவுன் போலீசில் மாணவி புகார் அளித்தார். அதில், நடராஜன் தன்னை பாலியல்  பலாத்காரம் செய்ததாகவும், அதை வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும்  தெரிவித்திருந்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்து, நடராஜனை  கைது செய்த போலீசார், நேற்று முன்தினம் ஆத்தூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்  சிவக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர், நடராஜனை சேலம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.  இதை தொடர்ந்து, போலீசார் நேற்று சேலம் மகிளா நீதிமன்றத்தில், நீதிபதி விஜயகுமாரி முன்னிலையில் நடராஜனை  ஆஜர்படுத்தினர். அவரை வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நடராஜன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

× RELATED ஆத்தூர் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3.30 லட்சம் கொள்ளை