அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் செல்போனில் புகார் தெரிவிக்கலாம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

ஊட்டி, பிப். 14:  நீலகிரி மாவட்டத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால் உடனடியாக செல்போன் மூலம் புகார் தெரிவிக்கலாம் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.   இதுகுறித்து நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி., தட்சிணாமூர்த்தி கூறியுள்ளதாவது: ‘நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் யாரேனும் பொதுமக்களிடம் லஞ்சம் பெற்றாலோ அல்லது ஊழல் புகார் இருந்தால் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இதன்படி தட்சணாமூர்த்தி (டிஎஸ்பி.,) 95666-16699, 94981-09718, கீதாலட்சுமி (இன்ஸ்பெக்டர்) 94981-76712 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு தட்சிணாமூர்த்தி கூறினார்.

× RELATED வீடு இல்லாத ஏழைகளுக்கு பாகுபாடு...