×

நகராட்சி மார்க்கெட்டில் கழிவு நீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி

ஊட்டி, பிப். 14: ஊட்டி நகராட்சி மார்க்கெட்  உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்குவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டில் உள்ள கடைகள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதனால் அங்கு, கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மழை நீர் வடிகால்கள் போதுமானதாக இல்லை. மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதும், சாதாரணமாக கால்வாய்களில் ஏதேனும் கழிவுகள் அடைத்தால், கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதும் தொடர்கிறது.
 இந்நிலையில், நகராட்சி இறைச்சி கடைகள் உள்ள பகுதியில் நேற்று காலை கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. இைதயடுத்து கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நகராட்சி நிர்வாகடம் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.
பின் சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஊழியர்கள் கழிவு நீர்கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்தனர்.
மேலும், கழிவு நீர் தடையின்றி செல்ல கால்வாய்  பெரிதாக அமைக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...