×

அரசு பள்ளிகளில் பாடபுத்தகம் வழங்குவதில் தாமதம் மாணவர்கள் பாதிப்பு

ஊட்டி, பிப். 14:நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகளில் இன்னும் மூன்றாம் பருவத்திற்கான பாடபுத்தங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 தமிழக அரசு புதிய பாடத் திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்த பின், மூன்று பருவங்களாக பாடத்திட்டங்களை பிரித்து மாணவர்களுக்கு புத்தங்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்த நிலையில், ஜனவரி மாதம் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது வரை சில பள்ளிகளில் மூன்றாம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள் வழக்கப்படவில்லை இதனால், பள்ளி மாணவ,மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 மேலும், கடந்த மாதம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட  ஆசிரியர்களை, பள்ளிக்கல்வித்துறை  பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த பணி மாற்றம் காரணமாக பல பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் செல்லாத நிலை நீடிக்கிறது. சில பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் சென்றாலும், அவர்கள் பாட புத்தகங்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : government schools ,
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...