வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்

கூடலூர், பிப்.14:கூடலூர் நகராட்சியில் வரி செலுத்தாத நான்கு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
 கூடலூர் நகராட்சியில் 2018-19 ஆண்டிற்கான வாடகை பாக்கி மற்றும் வரிவசூல் பாக்கி உள்ளிட்டவைகளை வசூலிக்க aநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். இதன்படி நேற்று கூடலூர் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத நான்கு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் வாடகை பாக்கி வைத்து இருந்த கடைகளில் ரூ.6 லட்சம் வாடகை பாக்கி வசூல் செய்யப்பட்டது.

× RELATED டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை