ஆளுங்கட்சியினர் நெருக்கடியால் தள்ளிபோகும் பணியிட மாறுதல்?

மதுரை, பிப். 14: ஆளுங்கட்சியினர் நெருக்கடியால் தாசில்தார்கள் இடமாறுதல் தள்ளிபோகிறது என்று வருவாய்த்துறையினர் கொந்தளிப்பில் உள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் முதல் நடைபெற உள்ளது. இதனால், நீண்டநாள் ஒரே பதவியில் உள்ளவர்களை கணக்கெடுத்து மாறுதல் செய்ய தேர்தல் ஆணையம் அனைத்து கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மொத்தம் 11 தாலுகாக்கள் உள்

ளன.

வருவாய்த்துறையை சேர்ந்தவர்கள் இந்த தாலுகாவில், ரெகுலர் தாசில்தாராக பதவி ஏற்பவர்கள், ஓர் ஆண்டு மட்டுமே பணியில் இருப்பார்கள். மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தாருக்கும் ரெகுலர் தாசில்தார் பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக இதனை ஆண்டாண்டு காலமாக மாவட்ட நிர்வாகம் கடைபிடித்து வருகிறது. ஆனால், தற்போது மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவில் உள்ள ரெகுலர் தாசில்தார்கள், ஒன்றைரை ஆண்டுகளுக்கு மேல் பணியில் நீட்டித்து வருகின்றனர். இவர்களை இடமாறுதல் செய்ய வேண்டும் என வருவாய்த்துறை மத்தியில் கோரிக்கை எழுந்தது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பணி மாறுதல் செய்யுமாறு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு, ‘இப்போதுதான் மதுரையில் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ளேன். அனைவரையும் ஆய்வு செய்து, இடமாறுதல் செய்ய சிறிது கால அவகாசம் கொடுங்கள்’ என கூறினார். அதனை சங்க நிர்வாகிகள் ஏற்று கொண்டனர். தற்போது கலெக்டர் பொறுப்பேற்று 6 மாதம் ஆகிவிட்டது.

தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. வருவாய்த்துறையில் பணியிட மாறுதலை உடனே நடத்த வேண்டும் என சங்க நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து மீண்டும் கோரினர். அதற்கு கலெக்டர் பிடிகொடுக்காமல், தேர்தல் வருகிறது.

அனுபவமான ஆட்களை வைத்துதான் பணியாற்ற வேண்டும். இப்போது இடமாறுதல் என்பது சாத்தியமா என அவர்களிடமே கேள்வி கேட்க சங்க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும், இம்மாதம் ஆரம்பத்தில் இடமாறுதல் தொடர்பாக ஆலோசனையில் கலெக்டர் ஈடுபட்டார்.

இதனிடையை விவசாயிகளுக்கு பிரதமர் ஊக்க நிதி கொடுக்க வேண்டும். இதனால் வருவாய்த்துறையினர் விவசாயிகள் குறித்து கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணி நடைபெறுவதால், தற்போதைக்கு இடமாறுதல் செய்வது சாத்தியமில்லை என சங்க நிர்வாகிகளிடம் கூறி கலெக்டர் மீண்டும் கைவிரித்ததாக கூறப்படுகிறது. இதனால் வருவாய்த்துறையினர் கொந்தளிப்பில் உள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், ‘‘தேர்தல் நேரத்தில் வருவாய்த்துறையில் நீண்டநாள் பதவியில் உள்ள தாசில்தார்கள் முதல் இளநிலை உதவியாளர் வரை பணி இடமாறுதல் நடக்கும். ஆனால், இதனை செயல்படுத்த கலெக்டர் காலம் தாழ்த்தி வருகிறார். குறிப்பிட்ட காலத்தில் இடமாறுதல் செய்ததால்தான் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு கிடைக்கும். காலம்தாழ்த்தும் போது, பதவி உயர்வில் சிக்கலை ஏற்படுத்தும். ஆளுங்கட்சியினர் சிலர் கலெக்டரிடம் தாசில்தார் இடமாறுதல் தொடர்பாக நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கலெக்டர் ஏற்று கொண்டதால் மாவட்டத்தில் இடமாறுதல் விஷயத்தில் கலெக்டர் பின்வாங்குகிறார்’’ என்றனர்.

Related Stories: