சேடபட்டி அருகே எஸ்ஐயை கத்தியால் குத்தியவர் கைது

பேரையூர், பிப். 14: சேடபட்டி அருகே எஸ்ஐயை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
சேடபட்டி அருகே சின்னக்கட்டளையில் கடந்த 12ம் தேதி இரவு எஸ்ஐ மாயன், ஏட்டு ஆனந்த் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னக்கட்டளை பஸ்நிறுத்தத்தில் போர்வையை மூடி ஒருவர் உட்கார்ந்திருந்தார். இதை கவனித்த இருவரும், அவரிடம் யார் என விசாரித்தனர். அப்போது திடீரென அந்நபர் எஸ்ஐ மாயனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிந்து அந்நபரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று டிஎஸ்பி சூரக்குமாரன் உசிலம்பட்டி- பேரையூர் சாலையில் ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோர வயல்வெளியில் சந்தேகம்படும்படியாக நடந்து சென்றவரை பிடித்து விசாரித்தார். இதில் அவர் எஸ்ஐ மாயனை கத்தியால் குத்தியவர் என்பதும், சின்னக்கட்டளையை சேர்ந்த முத்தையா (50) என்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். குளிருக்காக ஜர்கின் அணிந்திருந்ததால் அவர் போலீஸ் என தெரியவில்லை, என்னை அவர் அடிக்கவும், என் ஊரிலே வந்து என்னை ஒருவன் அடிப்பதா என்ற கோபத்தில் கத்தியால் குத்தி விட்டேன் என முத்தையா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

× RELATED அம்பாசமுத்திரம் எஸ்.ஐ. சஸ்பெண்ட்