கார் டிரைவர் கொலையில் பார் மேலாளர் உள்பட 2 பேர் கைது

மதுரை, பிப். 14: மதுரையில் கார் டிரைவர் கொலையில் டாஸ்மாக் பார் மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை கொடிக்குளம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் சிவா (22) என்பவர் கடந்த 12ம் தேதி இரவு புதூர் சிவானந்த நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் மர்மக்கும்பல் இவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. இதுகுறித்து புதூர் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதுதொடர்பாக காமராஜர்புரத்தை சேர்ந்த இளையராஜா (27), மதிச்சியத்தை சேர்ந்த டாஸ்மாக் பார் மேலாளர் தட்சிணாமூர்த்தி (32) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

× RELATED கட்சி கொடி கட்டி சென்றதை...