அரசு விளையாட்டு விடுதி மேலாளர் பொறுப்பேற்பு

மதுரை, பிப். 14: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரைக்கிளை நிர்வாக அலுவலகம் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இயங்கி வருகிறது. இங்கு அரசு விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி விளையாட்டுடன் கல்வியும் கற்று வருகின்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலராக இருப்பவர் தான் விளையாட்டு விடுதியை பொறுப்பு பணியாக இதுவரை கவனித்து வந்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விடுதிக்கு மட்டும் தனியாக மேலாளர் ஒருவரை விளையாட்டு ஆணையம் நியமித்துள்ளது. அரியலூரில் பணிபுரிந்து வந்த லெனின், மதுரை விளையாட்டு விடுதி மேலாளராக நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

× RELATED மீனாட்சி அம்மன் கோயிலில்