மலை மீது ஏறி போராட்டம் 40 கிரானைட் வழக்குகள் ஒத்திவைப்பு

மேலூர், பிப். 14: மேலூர் பகுதியில் தொடரப்பட்ட 40 கிரானைட் வழக்குகளை குற்றவியல் கோர்ட் ஒத்திவைத்தது.
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் அனுமதியின்றி வெட்டப்பட்ட கிரானைட் கற்களை அரசுடமையாக்க கோரி கலெக்டர் தொடர்ந்த வழக்குகளில் பிஆர்பி கிரானைட் நிறுவனம் உட்பட மற்ற கிரானைட் நிறுவனங்கள் சேர்த்து மொத்தம் 37 வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் கீழவளவில் பிஆர்பி கிரானைட் நிறுவனம் மீது தொடரப்பட்ட வழக்கில் அப்போதையை கீழவளவு விஏஓ ரவிச்சந்திரபிரபு அரசு தரப்பில் நேற்று சாட்சியம் அளித்தார். தொடர்ந்து பிஆர்பி நிறுவனம் மீது போலீசார் தொடர்ந்த ஒரு வழக்கும், வாகனங்களின் ஆர்சி புத்தகத்தை திரும்ப தரக்கோரி பிஆர்பி நிறுவனம் தாக்கல் செய்த 2 மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஷீலாவும், பிஆர்பி கிரானைட் நிறுவனம் சார்பாக வக்கீல்கள் மனோகரன், முத்துராமலிங்கம், அன்பு ஆகியோர் ஆஜரானார்கள். மொத்தம் உள்ள 40 வழக்குகளையும் ஐந்தாக பிரித்து மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட் பழனிவேல் உத்தர
விட்டார்.

× RELATED குமரி மருத்துவக்கல்லூரியில்...