தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் அலுவலக பதிவு பாதிக்காது துணை இயக்குனர் அறிக்கை

மதுரை, பிப். 14: தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
மதுரை கே.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நாளை (15ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில் தனியார் துறையை சேர்ந்த பிரபல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெற்று கொள்ளலாம். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு காலை 10 மணியளவில் நேரில் வர வேண்டும். இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

× RELATED மகா சிவராத்திரிக்கு கல்லா...