மேலூர் அருகே வயல் விழா

மேலூர், பிப். 14: மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் மேலூர் அருகேயுள்ள தும்பைப்பட்டியில் விதை அறிவியல் பற்றிய தொழில் நுட்பவியல் துறையின் வயல் விழா நடத்தப்பட்டது. கோ 52 (எம்ஜிஆர் 100) நெல் சாகுபடி செயல் விளக்கத்துடன் விழா துவங்கியது. விதை நுட்ப தலைவர் முனைவர் கீதா வரவேற்க, முனைவர் சசிகலா திட்ட விளைக்க உரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் பால்பாண்டி தலைமை உரையாற்றினார். மரபியல், பயிர் பெருக்கம் துறை சார்பாக ஞானமலர், சாகுபடி தொழில் நுட்பம் குறித்து வீரமணி, சுஜாதா பேசினர். வேளாண்மை துணை இயக்குநர் குமாரவடிவேல், கொட்டாம்பட்டி வேளாண் துணை இயக்குநர் மதுரைசாமியும் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு சந்தேகங்களை கேட்டறிந்தனர். தும்பைப்பட்டி ஊராட்சி செயலர் பிரபு ஏற்பாடுகளை செய்திருந்தார். முனைவர் வாகேஸ்வரன் நன்றி கூறினார்.

Related Stories: