வெண்ணந்தூர் அருகே திமுக கிராம சபை கூட்டம்

ராசிபுரம், பிப்.14: வெண்ணந்தூர் அருகே  மின்னக்கல் ஊராட்சியில் திமுக கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு  ஒன்றிய பொறுப்பாளர்  துரைசாமி தலைமை வகித்தார். ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், பேரூர் செயலாளர் முருகவேல்  உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.  ஊராட்சி  செயலாளர் சீனிவாசன்  வரவேற்றார்.  மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான காந்திசெல்வன், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் பேசிய பெண்கள் சாலை வசதி, குடிநீர் வசதி,  கூடுதல்  வகுப்பறை  கட்டிடம்,  மினி பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பேசினர். கூட்டத்தில் ஆதிகேசவன்,  குழந்தை வேல், பழனியப்பன், ராஜா,  வேல்முருகன், முருகன்  உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.


× RELATED இது ஓட்டுபோட நிற்கும் கூட்டம் அல்ல...