×

திருச்செங்கோட்டில் ராகுகேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

திருச்செங்கோடு, பிப்.14: திருச்செங்கோட்டில், ராகுகேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை பாதையில் நாகர்பள்ளம் என்ற இடத்தில், 60 அடி நாக சிற்பம் உள்ளது. இந்த நாகரை வேண்டிக்கொண்டால் திருமண தோஷங்கள், நாக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். நேற்று ராகுகேது பெயர்ச்சியை முன்னிட்டு நாகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்கள் நவதானியங்கள், சிவப்பு மஞ்சள் ஆகியவற்றை நாகர் சிலை மீறி தூவினர். ராகுகேது பெயர்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், பூஜையில் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். ராகு, கேது பெயர்ச்சியால் பாதிப்புக்கு உள்ளாகும் ராசியினர், இங்கு வந்து பரிகார பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Rakuguet ,
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்