திருமங்கலம் காமராஜர் உறுப்பு கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு

திருமங்கலம், பிப். 14: திருமங்கலத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்த ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருமங்கலம் அருகே கப்பலூரில் மதுரை காமராஜர்பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி உள்ளது. இங்கு தற்காலிக ஊழியர்களாக வினோத்குமார், ராஜேஷ்கண்ணா, தங்ககாளி, தண்டியாபிள்ளை பணிபுரிந்து வருகின்றனர். மதுரை கோச்சடையை சேர்ந்தவர் செந்தில்முருகன் (37). இவரிடம் வினோத்குமார், ராஜேஷ்கண்ணா உள்ளிட்டோர் கடந்த 2017ம் ஆண்டு றுப்புக்கல்லூரியில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் பணம் வாங்கியுள்ளனர். ஆனால் கூறியபடி செந்தில்முருகனுக்கு கல்லூரியில் வேலை வாங்கி தரவில்லை. பலமுறை கேட்டும் பலனில்லாததால் செந்தில்முருகன் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் செய்தார். இதன்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் ஊழியர்கள் வினோத்குமார், ராஜேஷ்கண்ணா, தங்ககாளி, தண்டியாபிள்ளை, அவரது மனைவி ஆகிய 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: