நடவடிக்கை எடுக்க கோரிக்கை தினசரி அறுவடை செய்து நேரடியாக களத்தில் விற்பனை குஜிலியம்பாறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

குஜிலியம்பாறை, பிப். 14:குஜிலியம்பாறை அருகே கரிக்காலி செட்டிநாடு சிமென்ட் ஆலை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்பு பேரணி நடந்தது.

குஜிலியம்பாறையில் இருந்து துவங்கிய பேரணியை எரியோடு இன்ஸ்பெக்டர் கருப்பசாமி துவக்கி வைத்தார். தொடர்ந்து செட்டிநாடு சிமென்ட் ஆலை நிர்வாகம் சார்பில், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது. பின்னர் டூவீலரில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது பாதுகாப்பு குறித்தும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது என்பது குறித்து ஒலி பெருக்கியில் பேசியவாறு சென்றனர்.

தொடர்ந்து தனியார் சிமென்ட் ஆலை ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்தபடி குஜிலியம்பாறை, பாளையம், சேர்வைகாரன்பட்டி உள்ளிட்ட ஊர்களின் வழியே கரிக்காலி ஆலையை சென்றடைந்தனர். கரிக்காலி செட்டிநாடு ஆலை இணைத்தலைவர் சுப்பிரமணி, துணை பொது மேலாளர் (மனிதவளம்) ராஜவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: