×

நத்தம் பகுதியில் வெள்ளரிக்காய் விவசாயம் மும்முரம்

நத்தம், பிப். 14: நத்தம் பகுதிகளில் விஷ வெள்ளரி என்னும் மருத்துவ குணம் நிறைந்த வெள்ளரிக்காய்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த பயிர்கள் வளர்ப்பதற்கான கால அளவு மிகவும் குறைவாகும். விதைப்பு செய்ததிலிருந்து 30 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். அந்த காலக்கட்டத்தில் ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் விட்டு 15 நாட்களுக்கு மகசூல் பெறுகின்றனர். இந்த வகையான விவசாயம் நத்தம் பகுதியில் அதிகம் காணப்படுகிறது. இதிலிருந்து அறுவடை செய்யும் வெள்ளரிக்காய்களை அந்தந்த இடத்திற்கே வாகனங்களை கொண்டு வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர்.
இதற்கு என்று சீசன் கிடையாது வருடம் முழுவதும் இவற்றை விவசாயம் செய்யலாம். இதனால் அலைச்சல் இன்றி வணிகம் செய்ய ஏதுவாக இருப்பதால் இதில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சின்னையாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் என்பவர் கூறுகையில், ‘இந்த விஷ வெள்ளரி என்னும் மருத்துவ குணம் மற்றும் சில உணவு வகைகள் இவற்றை முறையாக பதப்படுத்தி செய்யப்படுகிறது. இதற்காக உள்ள வியாபாரிகள் எங்களை அணுகி விதை, உரம் முதலானவற்றை தந்துவிட்டு செல்கின்றனர்.
இவற்றை விதைத்த 30 நாட்களில் கொடியானது படர்ந்து மகசூல் கிடைக்க ஆரம்பித்து விடுகிறது. இவற்றுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் விட வேண்டும். குறைவான தண்ணீர் இருப்பதாலும் மகசூல் பெறும் காலம் குறைவாக உள்ளதாலும் இவற்றை பயிரிடுகிறோம். 15 நாட்களுக்கு மட்டுமே முழுமையாக ஒரு கொடியிலிருந்து மகசூல் பெற முடியும். இவற்றிலிருந்து பெறப்பட்ட காய்களை வகைப்படுத்தி விலை நிர்ணயம் செய்து எடுத்துச் செல்கின்றனர்.
அவ்வாறாக மிகவும் சுண்டு விரல் அளவு இருக்கும் காய்களுக்கு கிலோ ரூ.35 என்றும் பருமன் ஆக ஆக அவற்றின் விலை குறைவாகவும், மிக குறைவான விலையாக கிலோ ரூ.3 வரையிலும் வாங்குகின்றனர். இவற்றை வியாபாரிகள் அந்தந்த இடத்திலேயே வாகனத்தை கொண்டு வந்து எடுத்துச் செல்வதால் அலைச்சல் இன்றி உள்ளது. எனவே இவற்றை ஆர்வமுடன் பயிரிட்டு வந்தாலும் போதிய தண்ணீரும் மேலும் கொடிகளை தாக்கும் நோய்கள் அதிகம் ஏற்படுவதால் மகசூல் கிடைப்பது குறைவாகி விடுகிறது. இதனால் லாபம் குறைவாகவே கிடைக்கிறது’ என்றார்.

Tags : Natham ,area ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா