மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுவில் பிரதிநிதி நியமனம்

ஒட்டன்சத்திரம், பிப். 14:திண்டுக்கல் மாவட்டத்தில், கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்களில் மாநில, மாவட்ட அளவிலான அரசுத்துறை அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலர்கள் மக்கள் பிரதிநிதிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள், பொது நலச்சங்கங்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் குழுக்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருப்பர். நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் பொருட்டு, இந்த குழுக்கள் அப்போது கூடி தன்னார்வ நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகளின் புகார் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று நுகர்வோரின் உரிமையை பாதுகாக்கும் நடவடிக்கையில் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு பிப்.15ம் தேதி முதல் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவையின் மாவட்ட தலைவர் விஸ்வரத்தினம் பிரதிநிதியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: