40 பவுன் நகைகளுடன் கடை உரிமையாளர் மாயம்

பவானி,பிப்.14:  பவானியில் வாடிக்கையாளருக்கு நகைகளின் மாடல் காட்ட சென்ற நகைக்கடை உரிமையாளர் மாயமானார்.

  பவானி மேட்டூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் மகன் சிங்காரவேலன் (45). இவர், தனது வீட்டின் முன்பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர், நகை வாங்குவோருக்கு நேரடியாக சென்று நகைகளின் மாடல்களை காட்டி விற்பனை செய்து வந்துள்ளார். இதேபோன்று நேற்று முன்தினம் மாலை நகைகளை எடுத்து கொண்டு வாடிக்கையாளருக்கு காட்ட பைக்கில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப்  செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சங்கீதா, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் சிங்காரவேலனை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் 40 பவுன் தங்க நகைகளுடன் சென்று இருந்ததாக கூறப்படுகிறது.இது பவானி போலீசில் மனைவி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சிங்காரவேலனை தேடி வருகின்றனர். சிங்காரவேலனின் செல்போன் அழைப்புகள் குறித்து போலீசார் கணக்கெடுத்து கடைசியாக அவரிடம் பேசியது யார் என்பது குறித்தும், அவருக்கு வேறு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: