ராகு-கேது பெயர்ச்சி விழா

ஈரோடு,  பிப். 14:   ஈரோட்டில் நாகர் கோவிலில் ராகு -கேது பெயர்ச்சி விழா நடந்தது.  இதில் பக்தர்கள் ராகு- கேதுவுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

ராகுபகவான், கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான், மகர  ராசியில் இருந்து தனுசு ராசிக்கும் இடம் பெயர்ந்தார். இதனையொட்டி ஈரோடு  காரைவாய்க்கால் ஸ்ரீ நாகர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடந்தது.  விழாவையொட்டி காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புன்யாஹவாஜனம், கடஸ்தானம்,  மூலவருக்கு யாகபூஜை ஆவாஹனம், ராகு-கேது ஸகஸ்ர நாமம், ஹோமமும் நடந்தது. இதை  தொடர்ந்து 10.19 மணிக்கு கடம் தீர்த்தம், அபிஷேகம், மூலவருக்கும்,  ராகு-கேதுவுக்கும் பால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ராகு-கேதுவுக்கு பால் அபிஷேகம்  செய்து வழிபாடு நடத்தினர். முன்னதாக, ராகு-கேது பெயர்ச்சிக்கு சிறப்பு  பரிகார யாக பூஜைகளும் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில்  நிர்வாகிகள் மணிகண்டன்,  ராஜேந்திரன், பாலசுப்ரமணி, முருகன் உள்ளிட்ட பலர்  செய்திருந்தனர்.

Related Stories: