3 பேர் தற்கொலை

கோவை, பிப்.14:   கோவையை அடுத்த ஆலாந்துறை பக்கமுள்ள மடகாடு சம்பந்தர் வீதியை சேர்ந்தவர் ஆனந்தன்(42). கூலி தொழிலாளி இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நேற்று முன் தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 ஒண்டிபுதூர் காமாட்சி புரம் நொய்யல் வீதியை சேர்ந்தவர் ரவி குமார்(40). திருமணமாகாதவர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேலைக்கு செல்வதில்லை. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவருடைய தாய் இறந்து விட்டார். அதனால் ஏற்பட்ட மன வேதனையில் நேற்று முன் தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
 கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(48). கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வீட்டில் தவறி கீழே விழுந்ததில் கை உடைந்தது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நேற்று முன் தினம் இரவு சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

× RELATED நாகர்கோவிலில் ஒரே குடும்பத்தை...