விசைத்தறியில் கைத்தறி சேலை உற்பத்தி செய்த 2 பேர் கைது

கோவை, பிப்.14: விசைத்தறியில் கைத்தறி ரக சேலை உற்பத்தி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை அன்னூர் அருகே எல்லப்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் விசைத்தறி கூடம் நடத்தி வருபவர் சண்முகம்(50). இவர் விதிமுறைகளை மீறி விசைத்தறியில் கைத்தறி ரக சேலைகளை உற்பத்தி செய்தார்.தகவல் அறிந்த கைத்தறி அமலாக்க பிரிவு அதிகாரி அம்சவேணி குறிப்பிட்ட விசைத்தறி கூடத்தில் நேற்று ஆய்வு செய்தார்.அப்போது விசைத்தறியில் கைத்தறி ரக சேலைகளை தயாரித்ததை கண்டுபிடித்தார். இதையடுத்து கைத்தறி சேலைகளை அம்சவேணி பறிமுதல் செய்தார்.
 இதேபோல், அதே பகுதியில் முருகேசன்(41), என்பவரின் விசைத்தறி கூடத்தில் ஆய்வு நடத்திய போது விதிமீறி கைத்தறி ரக சேலைகள் தயாரித்தது தெரிந்தது. இதையடுத்து அங்கும் சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
 இது தொடர்பாக அம்சவேணி அளித்த புகாரின் பேரில் அன்னூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் விசைத்தறி கூட உரிமையாளர்கள் சண்முகம், முருகேசனை கைது செய்தார்.

× RELATED வேளாண் உற்பத்தியை பெருக்க ஒருங்கிணைந்த பண்ணைய முறை