×

மொரப்பூரில் சில்லறையில் வைக்ேகால் விற்பனை

அரூர், பிப்.14:மொரப்பூர் பகுதியில் செயல்படும் கடைகளில் தீவன வைக்கோல் சில்லறை முறையில் விற்பனை செய்யப்படுகிறது.தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பருவ மழை பெய்யாததால், நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்தது. இதனால் குடிநீருக்கே மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது. பயிர் செய்திருந்த தென்னை, வாழை உள்ளிட்டவை தண்ணீர் இல்லாமல் கருகியது. கால்நடைகளுக்கும் போதிய தீவனம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே டெல்டா பகுதிகளிலிருந்து, வைக்கோலை மொத்தமாக வாங்கி வரும் தீவன கடைகாரர்கள், அதனை சில்லறை முறையில் ஒரு கட்டு ₹240 என விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு, லாரிகளில் மொத்தமாக வாங்கிய விவசாயிகள், இந்த ஆண்டு மொத்தமாக வைக்கோல் வாங்க கூட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மொரப்பூர் பகுதிகளில் உரக்கடைகள், தீவன கடைகளில் இது போல் வைக்கோல் வியாபாரம் தொடங்கியுள்ளது.


Tags : Morpore ,
× RELATED மொரப்பூர் பகுதியில் வெண்டை விலை உயர்வு