அரசு பள்ளியில் கல்வி சீர் விழா

அரூர், பிப்.14: அரூர் அருகே சின்னாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில், கல்வி சீர் திருவிழா நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக, இப்பள்ளியின் முன்னாள் மாணவர் பல்மருத்துவர் சுரேஷ் பள்ளிக்கு யுபிஎஸ் சாதனத்தை பரிசாக வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு எழுதுப்பொருட்களை வழங்கினர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


× RELATED அமரகுந்தி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி