துறையூரில் கிராம வளர்ச்சி திட்ட பயிற்சி முகாம்

தா.பேட்டை, பிப்.14:  துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாநில ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிராம வளர்ச்சி திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. ஒன்றிய அலுவலக aகூட்ட அரங்கில் நடைபெற்ற முகாமிற்கு  ஒன்றிய ஆணையர்  ஜோஸ்பின்ஜெசிந்தா தலைமை வகித்தார். சகுந்தலா முன்னிலை  வகித்தார்.  அப்போது  ஊராட்சி வளர்ச்சிக்கு திட்டமிடுதல், கிராம அடிப்படை  கணக்கெடுப்பு,  வாழ்வாதாரம் சார்ந்த பணிகள் மற்றும் மகாத்மாகாந்தி தேசிய  ஊரக வேலை உறுதி  திட்ட செயல்பாடு, சமூக பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட  தலைப்புகளில் பயிற்சி  வகுப்பு நடைபெற்றது. இதில் 34 ஊராட்சிக்குட்பட்ட  மகளிர் குழு கூட்டமைப்பு  நிர்வாகிகள், கிராம வறுமை ஒழிப்பு சங்க  நிர்வாகிகள், கிராம சமுதாய வள  பயிற்றுனர்கள் மற்றும் செயலர்கள் கலந்து  கொண்டனர். பயிற்சி வகுப்பினை மாநில  ஊரக வளர்ச்சி நிறுவன பயிற்றுனர்கள்  குமார், ஆனந்தி ஆகியோர் நடத்தினர்.

× RELATED துறையூரில்