×

வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் செயல்விளக்கம்

பாடாலூர், பிப்.14: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம், புதுவிராலிப்பட்டி கிராமத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை யாருக்கு வாக்களித்தோம் என்பதை  உறுதி செய்யும் கருவி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்  நிகழ்ச்சி நடைபெற்றது.   வருகின்ற மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலில் வாக்காளர்கள் தான் எந்த  வேட்பாளருக்கு வாக்களித்தோம்  என்பதை  தெரிந்துகொள்ளும் வகையில் விவி பேட் என்ற கருவியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவிகள் வாக்காளர் தாம் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என தெரிந்துகொள்ளும் வகையிலும் வாக்களித்த ஏழு வினாடிகளுக்குள் பதிவான வாக்கினை பார்த்து உறுதி செய்து கொள்ளும் வகையிலும் இந்தக் கருவியை இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம்  அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம், புதுவிராலிப்பட்டி கிராமத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்  வாக்காளர்கள் இந்த கருவி குறித்து தெரிந்துகொள்ளும் வகையிலும் பொதுமக்களிடம்விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரன், உதவியாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு  பொதுமக்களிடம் இந்த இயந்திரம் குறித்து எடுத்து கூறினர். நிகழ்ச்சியில்  செட்டிகுளம், புதுவிராலிப்பட்டிகிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்  கலந்துகொண்டு தான் வாக்களித்த வாக்கு யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்த்து விழிப்புணர்வு பெற்றனர்.

Tags : Demonstration verification engine demonstration ,
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது