×

பெரம்பலூரில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர், பிப்.14: பெரம்பலூரில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பாக தொழு நோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.பெரம்பலூரில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பாக தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பெரம்பலூர் ரோவர்ஆர்ச் பகுதியில் தொடங்கிய பேரணியை  மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சம்பத் தொடங்கி வைத்தார். இதில்  மாவட்டத் தொழுநோய் அலுவலர் டாக்டர் சாந்தி முன்னிலை வகித்தார். ரோவர்  நர்சிங் கல்லூரி, அன்னை மாதா நர்சிங் கல்லூரி ஆகிவற்றைச் சேர்ந்த 100க்கும்  மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் தொழுநோய் விழிப்புணர்வு  குறித்த பதாகைளை மாணவிகள் கைகளில் ஏந்தியபடி கோஷமிட்டவாறும்,  விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை பாதசாரிகளிடம், பொதுமக்களிடம்,  வர்த்தகப் பிரமுகர்களிடம் வழங்கியவாறும் சென்றனர்.பேரணியில் பெரம்பலூர்  மாவட்ட நலக்கல்வியாளர் குணசேகரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வசந்தா,  நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அனிதா, வட்டார சுகாதார  மேற்பார்வையாளர் ராஜ்மோகன், மருத்துவம் அல்லாத மேற்பார்வையாளர்கள் அறிவு,  சம்பத்குமார், பாலசுப்ரமணியன் ஆகியோர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள்,  சுகாதாரப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Leprosy Awareness Campaign ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...