தாந்தோணிமலை அங்கன்வாடி எதிரே பழுதடைந்த மினி டேங்க் சீரமைத்து பயன்பாட்டிற்கு விட கோரிக்கை

கரூர், பிப்.14: கரூர் தாந்தோ ணிமலை அங்கன்வாடி எதிரே பழுதடைந்த நிலையில் உள்ள சிறுமின்விசை குடிநீர் தொட்டியினை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர்  நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே  அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 20க்கும் மேற்பட்ட  குழந்தைகள் வந்து செல்கின்றனர். அங்கன்வாடி மற்றும் அருகில் உள்ள  துவக்கப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  சிறுமின்விசை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனால்,  மோட்டார் பழுது போன்ற பல்வேறு காரணங்களால் இந்த குடிநீர் தொட்டி தற்போது  பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரும்  பட்சத்தில், அங்கன்வாடி குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினர்களும்  பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. எனவே, இதனை பார்வையிட்டு சிறுமின்விசை குடிநீர் தொட்டி செயல்படுவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள  வேண்டும் என பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

× RELATED பழுதடைந்து கிடக்கும் மினி டேங்க்