ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசு

கரூர், பிப்.12: ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரூ.45 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கடந்த இரண்டு வாரங்களாக, கிரிக்கெட், சதுரங்கம், மாரத்தான் மற்றும் கபடி போன்ற போட்டிகள் திருவள்ளுவர் மைதானம் உட்பட பல்வேறு மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. அனைத்து போட்டிகளிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு விளையாடினர். இந்நிலையில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் அட்லஸ் கலையரங்கில் நடைபெற்றது. இதில், 1,302 மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரூ.45 லட்சம்  மதிப்பிலான பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு வழங்கி பாராட்டி பேசினார். இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா உட்பட அனைத்து அதிமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

× RELATED மாணவ,மாணவிகளை அங்கீகாரமற்ற பள்ளியில் சேர்க்க கூடாது