கரூர்-ஏமூர் செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் கற்கள் வாகனஓட்டிகள் கடும் அவதி

கரூர், பிப்.14: கரூர் ஏமூர்  செல்லும் சாலையின் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள கற்களால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை அகற்ற  வேண்டும் என்பதே அனைத்து தரப்பினர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கரூர்  நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் இருந்து ஏமூர் செல்லும் சாலையில்  முத்துலாடம்பட்டி அருகே சாலையின் குறுக்கே சாக்கடை வடிகால் செல்கிறது.  இந்நிலையில், சாலையின் மையப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் யாரும் பாதிக்கக்கூடாது என்பதற்காக  உடைப்பு ஏற்பட்ட பகுதியின் மையத்தில் கற்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால்,  இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடுமையாக  பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரூரில் இருந்து ஏமூர் பகுதிக்கு நான்கு  சக்கர வாகனங்களும், பேருந்துகளும் இந்த சாலையின் வழியாக செல்கிறது.  இந்நிலையில், கற்கள் உள்ளதால் அனைத்து தரப்பினர்களும் கடுமையாக அவதிப்பட்டு  வருகின்றனர். எனவே, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு உடனடியாக கற்களை அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

× RELATED உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலைத்துறை...