மூத்த குடிமக்கள் பேரவை கூட்டம்

தஞ்சை, பிப். 14: தஞ்சையில் மூத்த குடிமக்கள் பேரவை கூட்டம் நேற்று நடந்தது.மாவட்ட தலைவர் ஆதிநெடுஞ்செழியன் தலைமை வகித்தார். கமலா வரவேற்றார். செல்வராசு முன்னிலை வகித்தார். ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்யாமல் அவர்கள் மீது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிப்பதை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும். தஞ்சை- மயிலாடுதுறை ரயில் தடத்தை மின்மயமாக்க வேண்டும். இந்த தடத்தை இருவழி தடமாகவும் மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருமலை நன்றி கூறினார்.

× RELATED ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம்